Tag Archives: தைப்பூச மலர்

சங்கத் தமிழின் முதல் பெரும் பாடல்

8 Feb

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்-1

நக்கீரர்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் முதற்பெரும் பாடல் திருமுருகாற்றுப்படை.  பத்துப்பாட்டு நூல்களுள் முதலாவதான இந்த நெடும்பாடலை இயற்றியவர் நக்கீரர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்ட நம் தமிழ்மொழிக்கு மகுடமாக விளங்குபவை சங்க இலக்கியம் என்று கூறப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள். பொ.யு.முன் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.யு.பின் முதல் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் மதுரையில் இயங்கிய கடைச்சங்கத்தில் அங்கம் வகித்த புலவர்களின் படைப்புகளே இவ்விரு பிரிவுகளில் 18 நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது திருமுருகாற்றுப்படையே. Continue reading

சுட்ட பழமும் சுடாத பழமும்!

8 Feb

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்-2


தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று, மதுரை மூதூர் அருகிலுள்ள பழமுதிர்ச்சோலை. இயற்கை எழில் பூத்துக் குலுங்கும் பசுமையான அந்த பூமியில், ஒரு நாவல் மரக்கிளையின் மேல், மாடு மேய்க்கும் சிறுவன் அமர்ந்திருந்தான்.

பாத யாத்திரையாக பசித்து வந்த தமிழ்ப் புலவரான ஔவைப் பாட்டி, மரத்தின் மேல் இருந்த சிறுவனைப் பார்த்து, “தம்பி, ஒரு கிளையை உலுக்கு. பழம் உதிரும்; அதை உண்டு பசி தீர்த்துக்கொள்வேன்” என்றாள். சிறுவனோ, “பாட்டி உனக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? சொல்!” என்றான்.

பாட்டி சிரித்துக்கொண்டே, “மரத்தில் கனிந்த பழம் எப்படிச் சுடும்? பழம் பறித்துப் போடு” என்றாள். முருகனும் கிளையை உலுக்கினான். பழங்கள் உதிர்ந்து மண்ணில் விழ, பாட்டி அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து மண்ணைப் போக்க ஊதி ஊதிச் சாப்பிட்டாள். Continue reading

முருகனே இலக்கணம் சொன்ன நூல்

8 Feb

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்-3

கச்சியப்ப சிவாசாரியார்

தமிழ்ப் புலவர் ஒருவர் எழுதிய செய்யுள் நூலில் இலக்கணப்பிழை உள்ளதாக புலவர்கள் கூறியபோது, முருகனே நேரில் வந்து சந்தேகம் தீர்த்த கதை தெரியுமா? அதுதான் கந்த புராணம் அரங்கேறிய கதை.

பதினெண் புராணங்களும் சமஸ்கிருத மொழியில் இருப்பவை. அவற்றிலும் சிவபுராணங்கள் பத்தில் ஒன்று ஸ்கந்த புராணம். அது லட்சம் சுலோகங்களால் ஆனது; ஆறு சங்கிதைகளைக் கொண்டது. அதில் சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்று. இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம்.

உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களையும்,  91 படலங்களையும், 10,345 பாடல்களையும் உடைய கந்த புராணம், முருகப் பெருமானின் வரலாற்றை  முழுமையாகக் கூறுகிறது. இதை இயற்றியவர் பொ.யு. 12ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பெரும்புலவர் கச்சியப்ப சிவாசாரியார்.

Continue reading

இசைப்பாடலால் பக்திப்பயிர் வளர்த்த தமிழ்க்கவி

8 Feb

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்-4

அருணகிரிநாதர்

தனது இசைப்பாடல்களால் முருக பக்தி இயக்கத்தை வலுப்படுத்தியவர், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர். தமிழில் அதுவரை இருந்திராத புதிய சந்தங்களில் புதிய ராகங்களில். சிக்கலான தாளங்களில் அற்புதமான இசைப்பாடல்களைப் புனைந்து, தமிழ் இலக்கியத்தில் மைல்கல் ஆனவர் இவர்.

தமிழில் மட்டுமல்லாது சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர் அருணகிரிநாதர். சமஸ்கிருத வார்த்தைகளை அழகிய தமிழ்ச் சொற்களாக பாடலில் மாற்றும் இவரது லாவகமும் இலக்கண நுட்பமும் பாடிப் பயின்று பரவசப்பட வேண்டியதாகும். ராமாயணக் கதையை அருணகிரியார் திருப்புகழில் பல இடங்களில் விரவிப் பாடியிருக்கிறார். கிருஷ்ண லீலைகளையும் பாடியிருக்கிறார்; சுந்தரர், திருஞானசம்பந்தர் முதலிய சான்றோர் பெருமக்கள் பற்றியும் பாடியிருக்கிறார். Continue reading

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

8 Feb

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்- 5


சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழில், திருச்செந்தூர் முருகனுக்கு அற்புதமான இலக்கியத்தைப் படைத்தவர் பகழிக்கூத்தர்.

அடியாரது கனவில் தோன்றிய திருச்செந்தூர் முருகன், ‘பூமாது போற்றும் புகழ்ப் பகழிக்கூத்தா உன் பாமாலை கேட்கயாம் பற்றேமா?’ என்ற பாடலைத் தந்து சென்றதாகவும்,  விழித்தெழுந்த பகழிக்கூத்தரின் அருகே அந்த ஓலைத் துணுக்கு இருந்ததாகவும்,  அதன்பிறகே அவர் முருகன்மீது பிள்ளைத்தமிழ் பாடியதாகவும் தல வரலாறு கூறுகிறது. Continue reading

செந்தூரான் அருளால் பேச்சாற்றல் பெற்றவர்!

8 Feb

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்- 6

குமரகுருபர சுவாமிகள்

முருக பக்தர்கள் பலரும் பாடி மகிழும் பக்தி நூல் திருச்செந்தூர் முருகன் மீது பாடப்பட்ட ‘கந்தர் கலி வெண்பா’. பொ.யு. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர சுவாமிகள் இந்நூலை இயற்றினார்.

கலி வெண்பா யாப்பில், 122 வரிகளில் இயற்றப்பட்ட இந்நூல்,  சைவ சித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியது. முருகப் பெருமானின் தோற்றத்தை வர்ணித்து, கல்வி, ஒழுக்கம் முதலியவற்றை அருளுமாறும், துன்பங்களைப் போக்குமாறும் முருகனை இப்பாடல் வேண்டுகிறது.
Continue reading

%d bloggers like this: