Tag Archives: மதுவிலக்கு

அன்றொரு நாள் அதே நிலவில்…

19 Jun

அன்று ஒரு கருப்பு நாளாக மாற வேண்டியது.
முழு நிலவின் கிரணங்கள் சாலையில்
பொன்போல ஒளிர்ந்த அந்தத் தருணத்தில்
என்னை இயக்கியது யார்?

அந்த நிகழ்வின் முந்தைய நிமிடம் வரை
என் கால்கள் தடம் மாறவில்லை.
பல்வேறு தர்க்கங்களை மீறி
மனம் தடுமாறும் நேரத்தில்
எதிரில் வந்த நண்பரால்
போன முறை தப்பித்ததுபோல
அந்த நாளில் யாரும்
ஆபத்பாந்தவனாக வரவில்லை.

யாரும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் இருந்தாலும்,
யாரேனும் இடைபுக மாட்டார்களா என்ற ஏக்கமும்
ஒரு மூலையில் கிடந்து தவித்தது.
அப்படித்தான் அந்த கிடங்குச் சந்தில் நுழைந்தேன்.
அந்தக் கடை முன்பு பெரும் கூட்டம்.
திரும்பிவிடலாம் என்ற எண்ணம் வந்ததும்
உள்மன அரக்கன் அதை வெல்லத் துடிப்பதும்
எனக்கே புரியாத கவிதை போலிருந்தது. Continue reading

எப்போது உயரும்?

7 Jun

மதுக்கடைகள் எப்போது ஒழியும்? இந்த
மனிதரின் மாண்புகள் அப்போது உயரும்! (மது)
.
சதுப்பான நிலத்திலே சிக்கி – அந்தச்
சகதியில் ஆவியை விடுவது போலே,
மெது மெதுவாகவே அழிக்கும்- மது
மனிதரின் உடலையும் குடலையும் அரிக்கும்! (மது)

Continue reading

‘தீர்த்த’ யாத்திரை

31 May

தொண்டரணி உசுப்ப
ரதமேறிக் கிளம்பினார் தலைவர்
‘தீர்த்தம்’ ஏற்றிய உற்சாகத்துடன்.

மாநாட்டில் வெள்ளமாய்
குவிந்தனர் தொண்டர்கள்
‘தீர்த்தப்’ பரவசத்துடன்.

மணல் வற்றிய
‘தீர்த்த’நதி மைதானம் எங்கும்
புட்டிகளின் சிதிலங்கள்…

 

 

.

பழி ஓரிடம்…

28 May

 

 

பித்தமாநலக்குறைவா?
சாளரத்தை எக்கி
முதியவர் திணறல்.
.
குமட்டலுடன் வீச்சம்
பரவும் பேருந்தில்
பல முகங்களில் அசூயை.
.
பயணிகள் எவருக்கும்
மதுக்கடைகள் மட்டுமே
கிடைக்கின்றன சபிக்க.
(2010)
.

முரண்

22 May

ஊரெங்கும்
ஊரடங்கு போல் 
அடைத்துக் கிடக்கின்றன
எல்லாக் கடைகளும்
தொழிற்சாலைகளும்.

போன வருடம் 
சேது சமுத்திரத் திட்டத்துக்காக;
இந்த வருடம் 
இலங்கைத் தமிழருக்காக.

சாயாக் கடைகளும் கூட 
இல்லவே இல்லை.

விடுதியில் தங்கி 
வேலைக்குச் செல்பவர்கள்
வேறு வழியின்றி 
உண்ணாவிரதம்.

‘டாஸ்மாக்’ கடைகளில் 
மட்டும் 
ஜெகஜோதியாகக் கூட்டம்.

 

(2009-ல் எழுதியது; இன்றும்- கொரோனா காலத்திலும்- பொருந்துகிறது!)

ஒரு குவளைக் குருதி

18 Apr


நியாயவிலைக் கடையில்
வரிசையில் நிற்க 
தத்துவம் பேசிய
அதே கால்கள்
முண்டியடிக்கின்றன.

ஐம்பது காசு சில்லறைக்காக
நடத்துனரை வம்புக்கிழுத்த 
அதே வாய்
முழு ஐந்து ரூபாய் 
‘பாக்கி’ கேட்காமல்
ஊமையாகிறது.

Continue reading

%d bloggers like this: