Tag Archives: முகநூல்

வாமனனின் மூவடியே நமது அளவுகோல்!

11 Sep
வாமனன் உலகளந்ததைக் குறிக்கும் ஆதாரங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை ஓண நன்னாளாம் இன்று அறிவோம்! தெய்வத் தமிழில் செறிவோம்!
.

Continue reading

Advertisements

தமிழக அரசின் கடமை!

20 Jul

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரைத் தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் குவிவதால் அரசு தடுமாறுகிறது. இது வரை கூட்ட நெரிசலில் காரணமாக உடல்நலம் குன்றி 6 பக்தர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட சில பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க வர வேண்டாம் என்ற தொனியில் ஒரு விளம்பரத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இன்று (20.07.2019) பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார். இத்தனை பக்தர்களின் திரளை அரசாலும் காவல் துறையாலும் சமாளிக்க முடியவில்லை என்பதை, அரசு வெளியிட்டுள்ள விளம்பரம் வெளிப்படுத்துகிறது.

சொல்லப்போனால், இது அரசின் கையாலாகாத்தனம் மட்டுமே. இத்தகைய விளம்பரத்தை வெளியிடவே அரசு வெட்கப்பட்டிருக்க வேண்டும். அரசால் கோயில் நிர்வாகத்தையும் மக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்த இயலாவிடில் அறநிலையத் துறையும் காவல் துறையும் எதற்காக?

இதைவிட பல மடங்கு – சுமார் 5 கோடி மக்கள் திரண்ட கும்பமேளாவை எந்தச் சிக்கலும் விபத்துகளும் இன்றி உ.பி. அரசு அண்மையில் நடத்திக் காட்டவில்லையா? தேவை அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட அரசு நிர்வாகம் தானே தவிர, இத்தகைய விளம்பரம் அல்ல.

அரசால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றால் ஆன்மிக அமைப்புகள், சேவை அமைப்புகள், இந்து அமைப்புகளின் உதவியைப் பெறலாமே? இப்போதேகூட சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வரதர் கோயிலில் பக்தர்களுக்கு உதவும் பணியில் சத்தமின்றி ஈடுபட்டுக் கொண்டுள்ளனரே. அவர்களை கூடுதலாக இப்பணியில் ஈடுபடுத்தலாமே?

//தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோர் அத்திவரதரைத் தரிசிக்கும் நிகழ்வினைத் தவிர்க்குமாறு// மாவட்ட நிர்வாகம் இந்த விளம்பரத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

உண்மையில், அத்திவரதரை அவசியமாக தரிசிக்க வேண்டியவர்கள்- //தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள்// தானே?  அவர்கள் எளிதாக அத்தி வரதரை சேவிக்க ஏற்பாடு செய்து தருவதுதானே அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்?

அதை விடுத்து, அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள், காவல் துறையினர், பணபலம் மிக்கவர்கள், அதிகார வர்க்கத்தினர், திரைத் துறையினர் போன்றவர்கள் எளிதாக அத்தி வரதரை சேவிக்க அறநிலையத் துறை படாத பாடு படுகிறது. அவர்கள் எந்தச் சிரமமும் இன்றி அரை மணி நேரத்தில் இறைவனை சேவிக்கின்றனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் அர்ச்சகர்கள் மகிழ்கின்றனர். இதேபோல, //தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு// அரசு முன்னுரிமை கொடுத்து சிறப்பு வழியை ஏன் ஏற்படுத்தக் கூடாது?

தேவை கோயிலுக்கு யார் வரக் கூடாது என்று அரசு வேண்டுகோள்/ அறிவுரை விடுப்பது அல்ல; பக்தர்களின் சிரமங்களைக் குறைக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து முடிவெடுத்து, அதைச் செயல்படுத்துவதே.

வி.ஐ.பிக்கள் அத்தி வரதரை சேவிப்பதில் தவறில்லை. அவர்களும் பகதர்களே. ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை //தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு// ஏன் அளிக்கப்படவில்லை என்பதே இங்கு எழுந்துள்ள கேள்வி.

இன்றுடன் அத்தி வரதர் திருவிழா 20 நாட்களைக் கடந்துள்ளது. இன்னமும் 20 நாட்கள் இத்திருவிழா நடைபெற உள்ளது. இனிவரும் நாட்களிலேனும் பக்தர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் தெளிவான நடைமுறைகளை ஏற்படுத்தி, வி.ஐ.பி. என்ற பெயரில் சிலரை மட்டும் தனிவழியில் அனுப்புவதைத் தவிர்த்து, தேவைப்படும் பக்தர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து அத்தி வரதர் தரிசனத்தை அனைத்து பக்தர்களுக்கும் உறுதிப்படுத்துவது மாநில அரசின் கடமை.

பக்தர்களும் அத்தி வரதரை ஒரு முறை தரிசித்துவிட்டால் அடுத்த பக்தர்களுக்கு வழிவிட்டு வாய்ப்பளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று புதிய பக்தர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை ஆன்மிக அன்பர்கள் தவிர்ப்பது நல்லது.

அரசின் கடமை இயலாதவர்களுக்கு முதன்மை வாய்ப்பளிப்பதே. அதிகார வர்க்கத்துக்கும் பணபலத்துக்கும் சாமரம் வீசுவதல்ல. இறைவனின் முன்பு அனைத்து பக்தர்களும் சமம். அவனது சன்னிதியில் அரசே பாரபட்சம் காட்டுவது ஆட்சியில் உள்ளோருக்கு நல்லதல்ல.

முகநூல் பதிவு (20.07.2019)

 

மானமுள்ள தமிழரா நீங்கள்?

7 Apr

 

2009இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, அந்நாட்டு அரசுக்கு பலவகையிலும் உதவியது, மன்மோகன் சிங் தலைமையிலான அன்றைய ஐ.மு.கூட்டணி அரசு. அதன்மூலமாகவே விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவம் நிர்மூலம் செய்தது.

அங்கு இலங்கையில் வம்சாவளித் தமிழர்களை கொத்துக் குண்டுகளால் இலங்கை ராணுவம் துவம்சம் செய்து கொண்டிருந்தபோது, இங்கே நாம் மக்களவைத் தேர்தலில் ஆழ்ந்திருந்தோம். ‘இந்திராவின் மருமகளே வருக!’ என்று வரவேற்பிதழ் வாசித்துக் கொண்டிருந்தார் தமிழினத் தலைவர் மு.க. Continue reading

முதுமையிலும் தளரா செயல்வீரர்

14 Feb

திரு. ஜி.வீரப்பிரகாசம்

(1937- 2019 பிப். 14)

குடும்ப நண்பரும், பொறியாளருமான திரு.வீர.ராஜமாணிக்கத்தின் தந்தையார், திரு. ஜி.வீரப்பிரகாசம் (82) அவர்கள் இன்று காலை (14.02.2019) இறைவனடி சேர்ந்தார். காந்திய நெறியாளரான அவர், தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் மாநிலத் தலைவராக 1994 முதல் 1997 வரை பதவி வகித்தவர். Continue reading