Tag Archives: வரலாறு

நேதாஜி

29 Mar
விவேகானந்தரின்
வீர உரைகளால்
வார்க்கப்பட்டவன்.
 .
ஆன்மீகத்தில்
ஆசை கொண்டு
அலைந்து கண்டவன்.
 .
ஆங்கிலேயரின்
அடக்குமுறையால்
அவமானப்பட்டவன்.
 .
ஐ. சி.எஸ்.சை
உதறியதாலே
அதிசயமானவன்.
 .
சும்மா வராது
சுதந்திரம் என்று
உணர்ந்து சொன்னவன்.
.
காங்கிரஸ் கட்சியின்
காலித் தனங்களால்
காயம் பட்டவன்.
 .
சிறைத் தண்டனையால்
சித்திரவதையால்
சிரமப் பட்டவன்.
.
உடலே நொந்து
உறுத்தியபோதும்
உறுதியானவன்.
 .
அன்னியர் கண்ணில்
மண்ணைத் தூவி
பறந்து போனவன்.
 .
ஹிட்லரை நேரில்
குற்றம் கூறிய
குறிஞ்சிப் பூவினன்.
 .
சுதந்திரத் தீவின்
சுறுசுறுப்போடு
கை கோர்த்தவன்.
 .
ஐ.என்.ஏ.வால்
ஆங்கிலேயரை
அலற வைத்தவன்.
 .
எண்ணிய கனவை
எய்திடும் முன்னர்
எரிந்து போனவன்.
 .
இன்றும் தேசிய
இதயங்களிலே
இனிது வாழ்பவன்.
.
-விஜயபாரதம் (07.03.1997)
.
Advertisements

சூழல் போராளியான இயற்பியல் விஞ்ஞானி

23 Mar

வந்தனா சிவா

வாழ்க்கைப் பாதையில் இரு கிளைகள் பிரியும் இடம் வரும்போது பலரும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பது இயற்கை. எந்தப் பாதையில் பயணிப்பது? அப்படிப்பட்ட நிலைகளில் ஆழ்மனம் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் ஆழ்மனம் நமது ஆசைகள், லட்சியங்கள், எண்ணங்களின் சங்கமத் திடல். இப்படிப்பட்ட நிலை இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஒருவருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் தேர்ந்தெடுத்த பாதை, சூழியலைக் காக்கும் போராட்டப் பாதை. அவர் தான், உலக அளவில் புகழ்பெற்ற இந்திய சூழலியல் போராளி வந்தனா சிவா.

1952, நவ.5-இல், டேராடூனில் (உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது) பிறந்தார் வந்தனா சிவா. தந்தை வனப் பாதுகாவலர். தாய், விவசாயி. எனவே, இளம் வயதிலேயே, விவசாயம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு வந்தனாவிடம் புகுந்துவிட்ட்து. Continue reading

இதோ ஓர் இளம் விஞ்ஞானி!

20 Feb

பிரவீண்குமார் கோரகாவி

கணிப்பொறி நிறுவனமான இன்டெல் 2004-இல் அமெரிக்காவின் போர்ட்லேண்டில் நடத்திய சர்வதேச அளவிலான அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி அது (ISEF). அதில் இடம்பெற்ற விண்வெளி அறிவியல், உயிரி வேதியியல் படைப்புகளில் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்யச் சென்ற நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து கண்காட்சிக்கு வந்திருந்த எல்லோரும் திகைத்தனர். ஏனெனில், அப்போது அவனுக்கு வயது 15 மட்டுமே. அந்த நடுவர் குழுவில் நாஸா விஞ்ஞானிகளுடன் அவன் இடம் பெற்றிருந்தான்.

பள்ளிப்படிப்பு கூட முடிக்காத அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை, இந்தியாவைச் சேர்ந்த பிரவீண்குமார் கோரகாவி தான். அவனை நடுவர் குழுவில் சேர்ப்பதற்கு வித்திட்டவை, இளம் வயதில் அவன் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்புகளே. அவன் உருவாக்கிய 40,000 ஆண்டு நாள்காட்டியும், குடிநீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பமும், உணவுப் பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பமும் அவனது பிறவி மேதைமையை வெளிப்படுத்தின. அவனை சர்வதேச அறிவியல் சமூகம் வாரி அணைத்துக்கொண்டது. Continue reading

சர்வதேச மேலாண்மை வல்லுநராகத் திகழும் கணினி விஞ்ஞானி

13 Feb

அமர் குப்தா

’24 மணிநேர அறிவுத் தொழிற்சாலை’ என்ற சொல் உலக அளவில் பிரபலமாகி வருகிறது. 250 ஆண்டுகளுக்கு முன் உலகை உருமாற்றிய தொழிற்புரட்சி போல, இந்த நூற்றாண்டின் அடிப்படை மாற்றத்துக்கு 24 மணிநேர அறிவுத் தொழிற்சாலை (24-Hour Knowledge Factory) காரணமாக அமையும் என்று கருதப்படுகிறது.

இதன்படி, பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களும், விஞ்ஞானிகளும், உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்தபடியே ஒருங்கிணைந்து பணிபுரியும் வாய்ப்பு அமைத்துக் கொடுக்கப்படுகிறது. துறைகளிடையிலான இணக்கம், பணிகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒத்துழைப்பு, அறிவுசார் சொத்துரிமை திட்டம், தகவல் தொடர்பின் மூலமாக ஆய்வுச் சிரமங்களைக் குறைத்தல் ஆகிய அம்சங்களைக் கொண்டதாக  ’24 மணிநேர அறிவுத் தொழிற்சாலை’ விளங்குகிறது.

இதனை சிந்தனைக் கருவாக்கி வடிவமைத்தவர், இந்தியாவைச் சார்ந்த கணினி விஞ்ஞானியான அமர் குப்தா. கணினியியலில் பல சாதனைகளைச் செய்துள்ள குப்தா, மேலாண்மைத் துறையிலும் உலக அளவில் நிபுணராகத் திகழ்கிறார். அமெரிக்கக் குடிமகனாகிவிட்ட குப்தா, உலக அமைப்புகள் பலவற்றில் வழிகாட்டும் வல்லுநர் ஆவார். Continue reading