Tag Archives: ஹைகூ

மக்காச்சோளம்

11 Jul

மக்காச்சோளம் கேட்டாள் அருமை மகள்.
அதை ‘மக்குகள்’ சாப்பிடக் கூடாது என்றேன்.
நான் உங்களுக்கு கேட்கவில்லை என்றாள் அவள்.

 

 

2010

முரண்- 3

10 Jul

அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்க
இணையவழிக் கருத்தரங்கம்
நடந்தது ‘ஜூம்’ செயலியில்.

முடுக்கம்

16 Jun

அதிவேக வாகனத்துக்கு
ஒதுங்கி வழிவிடும்
வேக வாகனங்கள்.

.

நிகழ்

2 Jun

நிழலில் அமர்ந்து
அடிமரம் அறுப்பவன்
தலைமேல் சூரியன்.

 

(2010)

.

அழுகையின் அழகு

1 Jun

 

 

கவிஞனின் சீற்றம்

எழுதுகோலின் அழுகை

பிறந்தது கவிதை.

 

(2010)

.

பள்ளிக் குழந்தைகள்

31 May

1

பறக்கின்றன பட்டாம்பூச்சிகள்.
ஏக்கமாய்ப் பார்க்கின்றன
எல்.கே.ஜி. குழந்தைகள்.

2.

துள்ளும் வயதில்
பொதி சுமக்கின்றன
புள்ளிமான்கள்.

%d bloggers like this: