Archive | மதிப்புரை RSS feed for this section

பண்பாட்டு வரலாற்றின் பதிவேடு

9 Mar

உலகம் சுற்றிய தமிழறிஞரான சோமலெ  எழுதிய ஆய்வு நூல் இது.  தமிழ்நாட்டின் நிலப்பரப்பு, இயற்கை வளங்கள், இங்கு காணப்படும் மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழிபாடு உள்ளிட்ட அம்சங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார். மானுடவியல், பண்பாட்டியல் ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய அரிய பணியை, தனது பயண அனுபவங்கள் வாயிலாக மிகவும் எளிமையாக நிறைவேற்றி இருக்கிறார்.

Continue reading

கடவுள்களின் கரங்களில்…

7 Dec

பெரும்பாலான ஹிந்து தெய்வங்கள் ஆயுதங்கள் தாங்கிக் காட்சி அளிப்பது ஏன் என்ற கேள்விக்கு மானுடவியல், இலக்கியம், பண்பாடு, வரலாறு, மெய்யியல், சமயம்  சார்ந்த விளக்கங்களுடன் இந்நூலை எழுதி இருக்கிறார் சுமதி ஸ்ரீதர். அழிக்கும் போர்க் கருவிகளாக மட்டும் கருதாமல், தெய்வங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் சின்னங்களாக ஆயுதங்களைக் காண வேண்டும் என்ற இவரது கருத்து கவனத்திற்குரியது.

ஹிந்து சமயத்தில் மட்டுமல்லாது, பாரதத்தில் உருவான பௌத்த, சீக்கிய மதங்களிலும், நாட்டார் மரபுகளிலும் காணப்படும் கடவுளர்களின் ஆயுதங்கள் குறித்தும் நூலாசிரியர் விளக்கி இருக்கிறார். இதிகாச கால தெய்வங்கள் வில்லினை பிரதான ஆயுதமாகக் கொண்டிருப்பதும், தமிழக கிராம தெய்வங்கள் வாளினை பிரதான ஆயுதமாகக் கொண்டிருப்பதும் ஏன் என்ற விளக்கம், ஆசிரியரின் ஆய்வுத் திறனை வெளிப்படுத்துகிறது.

Continue reading

கணித மேதையை அறிய…

6 Dec

உலக கணித வரலாற்றில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையான எண்களின் உருவாக்கம், பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு, கணித விதிகள் ஆகியவற்றில் முன்னோடியான சாதனைகளை நிகழ்த்தியவர்கள் இந்தியர்களே. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே கணிதத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள் இந்தியர்கள் என்ற உண்மையை நமது மாணவர்களுக்கே தெரியாமல் பாதுகாத்து வருகிறோம் என்பது சோகமான உண்மை.

Continue reading