Archive | பிற RSS feed for this section

அக்கினிக் குஞ்சுகள் – நூல் வெளியீடு

24 Mar
பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அருட்செல்வம் நா. மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் (21.03.2023), ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் வெளியிடப்பட்டது. நூலை என்ஜிஎம்  கல்லூரித் தலைவர் திரு. பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, திரு. ம.சீனிவாசன் பெற்றுக் கொண்டார். அருகில் திரு. சங்கர் வாணவராயர் உள்ளார்.

செய்திச் சுருக்கம்:

மறைந்த தொழிலதிபரும் கல்வியாளருமான அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா கடந்த 21.03.2023, செவ்வாய்க்கிழமை, பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. என்.ஜி.எம். கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். சக்தி குழுமத்தின் தலைவர் ம.மாணிக்கம் வரவேற்றார். என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர்கள் ம. பாலசுப்பிரமணியம், ம.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில், அருட்செல்வர் நா.மகாலிங்கம் எழுதிய ‘வாழ்வுக்கு வந்த வள்ளலார்’, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் மொழிபெயர்த்த கலீல் ஜிப்ரானின் ‘மனித குமாரன் இயேசு’, வ.மு.முரளியின் ‘அக்கினிக் குஞ்சுகள்- 3 தொகுதிகள்’ ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. இவை அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் வெளியீடுகளாகும்.

‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் தொகுப்பை என்.ஜி.எம். கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, நா.மகாலிங்கத்தின் இளையமகன் ம.ஸ்ரீனிவாசன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சொற்பொழிவாளர் சுகி.சிவம் சிறப்புரையாற்றினார். அந்தச் செய்தியும் படங்களும் இங்கே உள்ளன.

Continue reading

அக்கினிக் குஞ்சுகள்: விஞ்ஞானியின் மதிப்பீடு

5 Mar

எழுத்தாக்கம்: த.வி.வெங்கடேஸ்வரன்

தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானியும், மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரஸார்’ அமைப்பின் நிர்வாகியுமான திரு. த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள், தமிழகத்தில் மாணவரிடையே அறிவியல் ஆர்வம் பெருக உழைத்து வருபவர். எனது ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூலை மிகவும் பாராட்டிய அவர், இந்நூல் குறித்த தனது மதிப்புரையை ‘அறிவுக்கண்’ என்ற அறிவியல் சஞ்சிகையில் (பிப்ரவரி 2023) எழுதியுள்ளார். எனது கட்டுரைகளில் உள்ள சில பிழைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்! அதேசமயம், மோதிரக் கையால் குட்டு! இதோ அந்தக் கட்டுரை இங்கே…

.

நூல் அறிமுகம்:

அக்கினிக் குஞ்சுகள் 
இந்திய விஞ்ஞானிகள் வரலாறு (மூன்று தொகுதிகள்)
ஆசிரியர்: வ.மு.முரளி.
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், 
பொள்ளாச்சி.

.

த.வி.வெங்கடேஸ்வரன்

சனிக்கோளுக்கு வளையம் உள்ளது போல யுரேனஸ் கோளுக்கும் வளையம் உள்ளது என முதலில் கண்டுபிடித்தவர் வானவியல் அறிஞர் வைணு பாப்பு. தமிழ்நாட்டில் ஏலகிரி மலையில் உள்ள காவலூர் தொலைநோக்கியைக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தினர் இவர்.

அதிவிரைவு இணையத் தொடர்பு; அதன் வழி நெட்பிளிக்ஸ் போன்ற இணைய வழி தொலைக்காட்சி. இதற்கெல்லாம் முதுகெலும்பாகத் திகழ்வது நுண்ணிழை ஒளியியல் எனப்படும் fibre optics. நாரிந்தர் சிங் கப்பானி எனும் இந்தியர்  தான் இந்தத் தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள கண்டுபிடிப்பாளர் என்பது உங்களுக்கு தெரியுமா?

தொடக்கக் கல்வியில் உலகம் முழுவதும் கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற செயல்களைக் கற்கிறோம்; இந்தக் கணிதச் செயல்களுக்கான, கடன் வாங்கி கழித்தல் போன்ற செய்முறைகளையும் கற்கிறோம். இந்தச் செய்முறைகளைத் தொகுத்தது பிரம்மகுப்தர் எனும் இந்திய அறிஞர். இவரது நூல் அராபிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உலகெங்கும் பரவி கணித கல்வியின் அடித்தளமாக இன்றும் விளங்குகிறது.  கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது அல்லவா?

Continue reading

சென்னை புத்தகக் காட்சியில்…. அக்கினிக் குஞ்சுகள்

7 Jan

.

சென்னை புத்தகக் காட்சியில், பொள்ளாச்சி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள எனது ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் விற்பனையில் உள்ளது.

10 பிரிவுகளில் 120 இந்திய விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு…

சுமார் 700 பக்கங்கள்; மூன்று தொகுதிகள்.

ஒரு தொகுதியின் விலை: ரூ. 250; மூன்று தொகுதிகளும் சேர்த்து விலை: ரூ. 750.

சென்னை புத்தகக் காட்சியில், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் அரங்கு அமைத்துள்ளது. அக்கினிக் குஞ்சுகள் உள்பட மையத்தின் அனைத்து நூல்களும் இங்கு கிடைக்கும்.

(அரங்கு எண்: 392).

***

மேலும் விவரங்களுக்கு…

திரு. பாலசுப்பிரமணியம் (கைப்பேசி எண்: 9976144451)

திரு. கிரி (கைப்பேசி எண்: 9445637190)

.