Tag Archives: தினமணி

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

5 May

பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மருந்து ஆராய்ச்சி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கை, மருத்துவ உலகில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.  

கரோனா தீநுண்மிக்கு எதிரான தங்கள் தயாரிப்புத் தடுப்பூசியான  ‘வேக்ஸெர்வியா’ (இந்தியாவில் கோவிஷீல்டு) காரணமாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டணுக்கள் குறைதல் உள்ளிட்ட அசாதாரணமான பக்க விளைவுகள் மிகச் சிலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு என்ற அஸ்ட்ரா ஜெனகா  நிறுவனத்தின் ஒப்புதல், இப்போது உலகம் முழுவதிலும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.  

2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவிய கரோனா தீநுண்மி, காற்றின் மூலமாக பலருக்கு விரைவாகப் பரவி, உடலின் சுவாச மண்டலத்தைச் செயலிழக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்திய கொடிய பெருந்தொற்றாகும்.

Continue reading

செயற்கை நுண்ணறிவின் அதிவேகப் பாய்ச்சல்!

14 Apr

-மனீஷ் திவாரி

இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் ஜனநாயகரீதியிலான தேர்தல்களில் 400 கோடி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். வழக்கமாக இந்தத் தேர்தல் திருவிழா ஜனநாயகத்தின் வெற்றியாகக் கொண்டாடப்படும். ஆனால், இன்றைய காலத்தின் நவீனத் தொழில்நுட்ப வரவான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிகழ்த்தும் அதிரடிச் செயல்பாடுகள் தேர்தல் களத்தை கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

நமது பழைய தேர்தல் முறைகளால் ஏற்படும் பாதிப்பல்ல இது. காலாவதியாகிவிட்ட வாக்காளர் பதிவு முறை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேர்தல் மேலாண்மை மென்பொருள் ஆகியவற்றில் உள்ள பலவீனங்கள் துஷ்பிரயோகம் செய்வதற்காகக் காத்திருக்கின்றன. ஆனால் அதைவிட சிக்கலான ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கிறது.

இன்று பரவலாக புழக்கத்தில் உள்ள சமூக ஊடகங்கள், கட்டுப்பாடற்ற தகவல் பெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. இப்போது எவரும் மிகக் குறைந்த செலவில் தங்கள் கருத்துகளைப் பதிவிட முடியும். பன்முக  உள்ளடக்கத்தைக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஜெனரேட்டிவ் ஏ.ஐ.) இதை மேலும் எளிதாக்கி இருக்கிறது. இது முதல் அதிரடி மாற்றம் ஆகும்.

Continue reading

பழைய ஓய்வூதியத் திட்டம் – புதிய சவால்கள்

29 Mar

-பி.எஸ்.எம்.ராவ்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) எதிர்ப்பவர்கள், தங்கள் கடுமையான எதிர்ப்பை பல வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆயினும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதாக  அறிவித்துவிட்டன. இதனை தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்ததால், கர்நாடகமும் தெலங்கானாவும் இதே திசையில் செல்லத் தயாராகி வருகின்றன.

மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் பயனாக ஒவ்வொரு மாநிலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறி வருகின்றன. இதைக் காணும்போது, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனினும் ஓபிஎஸ் திட்டத்திற்கு சில தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

Continue reading