Tag Archives: தமிழ்

ஹிந்துப் பண்பாட்டில் மொழி

24 Feb

`வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்‘  

-என்று பாடுவார் அப்பர் பெருமான் (திருத்தாண்டகம்- பதிகம்: 6.87)

நமது பண்பாட்டில் மொழி பெற்றுள்ள பேரிடத்துக்குச் சான்று பகர்கிறது இப்பாடல். அது மட்டுமல்ல, கண்ணுதற் கடவுளே கழகமோடு அமர்ந்து தமிழாய்ந்த பெருமையுடையது தமிழ் நிலம். ஈசனே தமிழ் அகப்பொருளுக்கு இலக்கணம் எழுதினார் என்பதும் நம் நம்பிக்கை. ஈசனின் மகனான முருகனோ, செந்தமிழ்க் கடவுளாகவே போற்றப்படுகிறார்.

மொழி என்பது நமது பண்பாட்டின் பிரிக்க முடியாத அம்சம். இந்தப் பண்பாடே, மொழியாலும், வழிபாட்டு முறைகளாலும் ஊடாடி நெய்த சேலை போலத்தான் காட்சி தருகிறது.

இந்த பரந்த பாரத தேசத்தில் பல வகையான மொழிக் குடும்பங்களை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. குறைந்தபட்சம் பத்தாயிரம் பேருக்கு மேல் பேசும் மொழிகள் மட்டுமே தனி மொழி என்று மொழியியல் அறிஞர்களால் அங்கீகரிக்கப்படுகின்றன. இந்த மொழிகளிலும் பெருமளவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 22. அவற்றை நமது அரசு அலுவல் மொழிகளாக அங்கீகரித்திருக்கிறது. Continue reading

பண்ணிக் காய்ச்சல்

11 Aug
ஏர்லி மார்னிங்:

காரை ரோட்டில் ‘பார்க்’ பண்ணி,
கிரவுண்டில் வேகமாய் ‘வாக்’ பண்ணி,
குனிந்து நின்று ‘பிரீத்’ பண்ணி,
மார்னிங்கை ‘என்ஜாய்’ பண்ணி,
உடன் வந்தவர்களிடம் ‘ஷேக்’ பண்ணி,
எல்லோரிடமும் ‘லாப்’ பண்ணி,
வாக்கிங் ‘ஸ்டாப்’ பண்ணி,
ஓட்டலில் காபி ‘டேஸ்ட்’ பண்ணி,
வீடு திரும்பினேன் –
காரை ‘டிரைவ்’ பண்ணி.

Continue reading

நீங்கள் இருக்கிறீர்களே?

8 Aug

 

எளிதில் புரியாத படிமச்சொற்கள்,
சுற்றி வளைக்கும் வாக்கிய நடை,
சிற்சில இடங்களில் கலைச்சொற்கள்,
சில இடங்களில் தமிங்கிலச் சொற்கள்,
வரிகளிடையே இயல்பான வர்ணனை, Continue reading