Tag Archives: மனீஷ் திவாரி

செயற்கை நுண்ணறிவின் அதிவேகப் பாய்ச்சல்!

14 Apr

-மனீஷ் திவாரி

இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் ஜனநாயகரீதியிலான தேர்தல்களில் 400 கோடி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். வழக்கமாக இந்தத் தேர்தல் திருவிழா ஜனநாயகத்தின் வெற்றியாகக் கொண்டாடப்படும். ஆனால், இன்றைய காலத்தின் நவீனத் தொழில்நுட்ப வரவான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிகழ்த்தும் அதிரடிச் செயல்பாடுகள் தேர்தல் களத்தை கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

நமது பழைய தேர்தல் முறைகளால் ஏற்படும் பாதிப்பல்ல இது. காலாவதியாகிவிட்ட வாக்காளர் பதிவு முறை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேர்தல் மேலாண்மை மென்பொருள் ஆகியவற்றில் உள்ள பலவீனங்கள் துஷ்பிரயோகம் செய்வதற்காகக் காத்திருக்கின்றன. ஆனால் அதைவிட சிக்கலான ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கிறது.

இன்று பரவலாக புழக்கத்தில் உள்ள சமூக ஊடகங்கள், கட்டுப்பாடற்ற தகவல் பெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. இப்போது எவரும் மிகக் குறைந்த செலவில் தங்கள் கருத்துகளைப் பதிவிட முடியும். பன்முக  உள்ளடக்கத்தைக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஜெனரேட்டிவ் ஏ.ஐ.) இதை மேலும் எளிதாக்கி இருக்கிறது. இது முதல் அதிரடி மாற்றம் ஆகும்.

Continue reading

வாரிசுகள் தலையில் கடன்சுமை

9 Dec

-மனீஷ்  திவாரி


மக்களாட்சி முறையில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நலத் திட்டங்கள் அரசால் நிறைவேற்றப்படுவது அவசியம். ஆனால், நலத் திட்டங்களுக்கான எல்லை எங்கே முடிகிறது, கவர்ச்சி அரசியல் எங்கே தொடங்குகிறது என்ற கேள்விக்கு தெளிவான பதில் அளிப்பது சிரமம். அதேசமயம், கவர்ச்சி அரசியல் அறிவிப்புகளால் நாட்டின் நிதி நிலைமை திவாலாவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

“நேர்த்தியான வாழ்க்கைக்கு சிக்கனம் மிகவும் அவசியம் என்று நம்புகிறேன்” என்ற அமெரிக்கத் தொழிலதிபர் ஜான் டி ராக்பெல்லரின் கருத்து மிகவும் பிரபலமானது. 1990க்கு முந்தைய தலைமுறையினரிடையே கடனுக்கு பொருட்களை வாங்கி நுகர்வது குற்றமாகக் கருதப்பட்டது. அதாவது எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் உறுதியில்லாத வரவுகளின் அடிப்படையில் இன்று செலவு செய்யக் கூடாது என்று, பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்டது.

Continue reading

மாலத்தீவின் ஆட்சி மாற்றம்!

4 Nov

-மனீஷ் திவாரி

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், இந்தியாவைப் பொருத்த வரை  எதிர்பாராதது மட்டுமல்ல, மிகவும் துரதிர்ஷ்டமானது. இந்திய எதிர்ப்பு அரசியல்வாதியும், சீன ஆதரவாளராகக் கருதப்படுபவருமான டாக்டர் முகமது மூயிஸ் அங்கு நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இனம், மொழி, கலாச்சாரம், வர்த்தகம் எனப் பல வழிகளில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் நெருங்கிய உறவு உண்டு. மாலத்தீவு என்ற பெயரே  ‘மாலத்வீபம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபு தான். தீவுகளின் மாலை என்று இதற்குப் பொருள். மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியான  ‘திவெயி’, சமஸ்கிருதம், பிராகிருதம், தமிழ் ஆகிய இந்திய மொழிகளின் தாக்கம் கொண்டது.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1965 ஜூலை 26இல் மாலத்தீவுகள் விடுதலை பெற்றபோது, அந்தத் தீவுக்கூட்டத்தை  சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு இந்தியா தான். 1981இல் இரு நாடுகளிடையே உருவான விரிவான வர்த்தக ஒப்பந்தம், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளின் வர்த்தக நலன்களை மேம்படுத்தியதுடன், இருதரப்பு உறவையும் வலுப்படுத்தி இருக்கிறது.

Continue reading