Tag Archives: திரௌபதி முர்மு

வீறுநடை போடும் மகளிர் சுதந்திரம்!

9 Mar

-திரௌபதி முர்மு

கடந்த ஆண்டு, அரசியலமைப்பு தினத்தை ஒட்டி உச்ச நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட விழாவில் இறுதிப் பேருரை ஆற்றியபோது, அனைவருக்கும் நீதி கிடைப்பதன் அவசியம் குறித்துப் பேசினேன். அப்போது, சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளின்  உரிமைகள் பற்றிக் குறிப்பிட்டேன். எனது இதயத்திலிருந்து பேசிய அந்தப் பேச்சுக்கு ஓரளவு தாக்கமும் இருந்தது. இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, அதேபோன்ற உணர்வுடன், எனது இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

எனது மழலைப் பருவத்திலிருந்தே, சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை குறித்து குழப்பங்களை அடைந்து வந்தேன். ஒருபுறம், பெண் குழந்தைகள் குடும்பத்தில் மிகவும் செல்லமாகவும் பாசமாகவும் நடத்தப்படுகிறார்கள்; விழாக் காலங்களில் பெண் குழந்தைகளை வழிபடுவதையும் காண முடியும். அதேசமயம் மறுபுறத்தில், சம வயதுடைஅய ஆண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்பதையும் பெண் குழந்தைகள் மிக விரைவில் புரிந்துகொள்கின்றனர்.

Continue reading