Tag Archives: பி.எஸ்.எம்.ராவ்

கண்ணியமான ஓய்வூதியம் கிடைக்குமா?

20 Oct

-பி.எஸ்.எம்.ராவ்

எந்த ஒரு நாட்டிலும் முதியவர்களின் எண்ணிக்கை நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புடைய காரணியாக உள்ளது. அவர்களது கடைசிக்கால வாழ்க்கை நலமாக இருப்பதை உறுதிப்படுத்தும்  ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலவாழ்வுத் திட்டங்களே நாட்டின் உயர்வை வெளிப்படுத்தும்.

இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை  அதிவேகமாகப்  பெருகி வருகிறது.  1961இல் 2.47 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை 2011இல் 10.4 கோடியாகவும், 2021இல் (முன்கூட்டிய கணிப்பு) 13.8 கோடியாகவும் அதிகரித்தது. 2031இல் இது 19.4 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி விகிதம் 5.6 % (1961), 8.6 % (2011), 10.1  % (2021), 13.1 % (2031)  ஆகும். இதே வளர்ச்சி வேகத்துடன் முதியோருக்கான அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

Continue reading

விஸ்வகர்மா திட்டம்: ஒரு பார்வை

17 Sep

-பி.எஸ்.எம்.ராவ்

கைவினைக் கலைஞர்களின் குலதெய்வ வழிபாட்டு தினமான விஸ்வகர்மா ஜெயந்தி செப். 17இல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், கைவினைத் தொழிலாளர்கள், கலைஞர்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்குகிறது.  கைவினைத் தொழிலாளர்கள் மிகுந்த இதர பிற்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வாக்குகளை பெருமளவில் கவர இத்திட்டம் உதவும் என்று மோடி அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

நாட்டு மக்கள்தொகையில் 52 % பங்கு வகிக்கும் ஓபிசி வகுப்பினரின் ஆதரவைப் பெறுவது, விரைவில் நடைபெற உள்ள மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், அடுத்த ஆண்டு நிகழ உள்ள  மக்களவைத் தேர்தலிலும் பயனளிக்கும் என்பது பாஜகவின் நம்பிக்கை.

ஆனால் இத்திட்டத்தின் பயனாளிகளிடம் முறையாகவும் விரிவாகவும் திட்டம் சென்று சேரும்போதுதான், இவர்களது எண்ணம் நிறைவேறுமா என்பது தெரியவரும். அடுத்ததாக, இதுபோன்ற திட்டங்கள் வாக்குகளாக மாறும் என்பதே அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பாக இருப்பதை நாம் கண்டு வருகிறோம்.

Continue reading

வைப்புத்தொகைக்கு முழு காப்பீடு எப்போது?

2 Jul

-பி.எஸ்.எம்.ராவ்

2008ஆம் ஆண்டு உலக அளவில், குறிப்பாக அமெரிக்காவில் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது பல வங்கிகள் திவாலாகின. அப்போது அமெரிக்க அரசு நிதி நிறுவனங்களைக் காப்பாற்ற அரசாங்க நிதியுதவியை அறிவித்தது. பெரும் நிதி நிறுவனங்கள் வலுவிழக்கும்போது நாட்டின் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும் என்ற (டிபிடிஎஃப்) நிதிக்கோட்பாட்டின் அடிப்படையில் அந்த பிணைத்தொகை (பெயில்-அவுட்)  உதவி செய்யப்பட்டது.

அதாவது, வங்கிகளின் முதலீட்டாளர்களையும் பங்குதாரர்களையும் காப்பதற்காக,  அரசு கருவூலத்திலிருந்து நிதியுதவி அளித்து, திவாலான நிலையிலிருந்த நிதி நிறுவனங்களைக் காப்பாற்றியது. ஆனால் தனிப்பட்ட நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு பொதுமக்களின் சொத்தான அரசுக் கருவூலத்திலிருந்து பிணைத்தொகையை அரசு வழங்குவது ஏற்புடையதல்ல என்ற  கருத்து வலுத்தது. அப்போது அரசு பிணைத்தொகை வழங்கும் ஏற்பாட்டிற்குப் பதிலாக  ‘பெயில்-இன்’ என்ற புதிய சிந்தனை முன்வைக்கப்பட்டது.

Continue reading