பாஜக வெறுப்பில் சறுக்கியவர்கள்!

13 Feb

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் அனுப்பிய டிவிட்டர் பதிவு.

மேற்கு வங்க சட்டப்பேரவையை தனது அதிகாரத்தின் கீழ் ஆளுநர் முடக்கியதாக, ஒரு ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் சனிக்கிழமை (12.02.2022) மாலை செய்தி வெளியானது. இதனால் மிகப் பெரிய அரசியல் சாசன சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டது.

ஆளுநரின் அரசியல் சட்ட 174 வது பிரிவு ஆணையும் அதில் உடன் கொடுக்கப்பட்டிருந்தது.

மேற்கு வங்க ஆளுநரின் PROROGUE ஆணை.

உண்மையில் பேரவைத் தலைவரின் பரிந்துரைப்படியே பேரவைக் கூட்டத்தை ஆளுநர் முடித்து வைப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியை நம்பி சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. சில தமிழ் தொலைக்காட்சிகளும் இதை ஒளிபரப்பி மகிழ்நதன. (நல்ல வேளை விவாதம் நடத்தவில்லை). பிறகு உண்மை தெரிந்தவுடன் அனைவரும் கமுக்கமாக அமைதியாகி விட்டனர்.

இப்போது ஆங்கில நாளிதழ் இணையதளத்தில் பழைய செய்தியைத் தேடினால் நீக்கப்பட்டுள்ளது. (PAGE NOT FOUND என்று வருகிறது) 

தேள் கொட்டிய திருடன்!

தி இண்டுவின் விஷமம்

பாஜக வெறுப்பில் அவசர கதியில் செய்தி வெளியிட்ட ஆங்கில நாளிதழ் தற்போது ‘திருடனுக்கு தேள் கொட்டியது போல’ அமைதி காக்கிறது. ஆளுநர் அளித்த PROROGUES குறித்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.

விஷ(ய)ம் இத்தோடு முடியவில்லை. ஆங்கிலப் பத்திரிகை செய்தியை நம்பி முகநூலில் சிலர் மேற்கு வங்க ஆளுநருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கம்பு சுற்றினர்.

தமிழக முதல்வர் அதை நம்பி, ‘ஜனநாயகம் காக்க’  மேற்கு வங்க ஆளுநரைக் கண்டித்து டிவிட்டரில் பதிவிட்டார். பாஜக வெறுப்பு அவரையும் சிந்திக்க விடாமல் தடுத்து விட்டது.

மம்தா பானர்ஜியே அமைதியாக இருக்கிறாரே, ஏன் என்று, முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூட சிந்திக்க மாட்டார்களா?

முதல்வருக்கு இப்போது மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் விளக்கமான ஆணையுடன் விளக்கி டிவிட்டரில் பதில் கொடுத்திருக்கிறார். முதல்வரிடமிருந்து இதற்கு என்ன பதில் வருகிறது என்று தெரியவில்லை.

வெறுப்புணர்வும் அவசரமும் சிந்தனையை மழுக்கி விடுகின்றன என்பது உண்மை தான்.

 

-முகநூல் பதிவு (13.02.2022)

Leave a comment