Tag Archives: பண்டிகை

தரணி மகிழ தைமகளே வருக!

15 Jan

ன்றாடம் உழைத்துக் களைக்கும் உழவர்களும் தொழிலாளர்களும் பண்டிகைக் காலங்களில் தான் தங்கள் வாழ்வின் பொருளைப் பெறுகிறார்கள். அதற்காக சமுதாய நோக்கில் தாமாக வடிவமைந்தவையே பண்டிகைகள். இந்தப் பண்டிகைகளில், இயற்கையான சமூக வழிபாடாக அமைந்த பொங்கல் பண்டிகை தலையாயது.

இந்த உலக இயக்கத்திற்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சூரியனையே கடவுளாக்கி வழிபடும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. நாம் வாழும் உலகில் இரவுக்காலம் குறைந்து பகல் காலம் அதிகரிக்கும் சூரியனின் திசை மாற்றம் தை மாதம் நிகழ்கிறது.

இந்த மாற்றத்தால் அசதி குறைந்து சுறுசுறுப்பு பெருகுகிறது. எனவே தான் இந்த மாற்றத்தை உலக உயிர்கள் வரவேற்கின்றன. இதனை வரவேற்கும் விதமாகவே நாடு முழுதிலும் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தமிழகத்தில் பொங்கல் திருவிழாவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Continue reading

நவசக்தி – கவிதைகள்

16 Oct

 

நூன்முகம்

அன்புடையீர்,

வணக்கம்.

இந்த ஆண்டு நவராத்திரியை ஒட்டி முகநூலில் தினம் ஒரு மரபுக்கவிதையைப் படைத்து வந்தேன். இதில் ஏற்கனவே எழுதிய கவிதைகளும் உண்டு; புதிதாக எழுதிய கவிதைகளும் உண்டு. (அவை இத்தளத்தில் ஏற்கனவே உள்ளன). அவற்றின் தொகுப்பு, நவராத்திரியின் நிறைவான விஜயதசமியை அடுத்து, இதோ இன்று உங்கள் பார்வைக்கு…

குறிப்பு: 

நவசக்தி- புதிய சக்தி / சக்தியின் ஒன்பது வடிவங்கள்.

***

Continue reading

சரஸ்வதி வந்தனம்

15 Oct

அன்னப் பறவை அவள் வாகனம்.
இனிய வீணை அவள் சாதனம்.
வெண் தாமரை அவள் ஆசனம்.
அறிவே அவளது பூசணம்.

ஜபமாலை அவள் நூதனம்.
ஞானம் அவளது சீதனம்.
கல்விக்கே அவள் காரணம்.
கலைகள் அவளது பூரணம்.

Continue reading