Tag Archives: நவராத்திரி

நவசக்தி – கவிதைகள்

16 Oct

 

நூன்முகம்

அன்புடையீர்,

வணக்கம்.

இந்த ஆண்டு நவராத்திரியை ஒட்டி முகநூலில் தினம் ஒரு மரபுக்கவிதையைப் படைத்து வந்தேன். இதில் ஏற்கனவே எழுதிய கவிதைகளும் உண்டு; புதிதாக எழுதிய கவிதைகளும் உண்டு. (அவை இத்தளத்தில் ஏற்கனவே உள்ளன). அவற்றின் தொகுப்பு, நவராத்திரியின் நிறைவான விஜயதசமியை அடுத்து, இதோ இன்று உங்கள் பார்வைக்கு…

குறிப்பு: 

நவசக்தி- புதிய சக்தி / சக்தியின் ஒன்பது வடிவங்கள்.

***

Continue reading

சரஸ்வதி வந்தனம்

15 Oct

அன்னப் பறவை அவள் வாகனம்.
இனிய வீணை அவள் சாதனம்.
வெண் தாமரை அவள் ஆசனம்.
அறிவே அவளது பூசணம்.

ஜபமாலை அவள் நூதனம்.
ஞானம் அவளது சீதனம்.
கல்விக்கே அவள் காரணம்.
கலைகள் அவளது பூரணம்.

Continue reading

நன்மையே வெல்லும்!

14 Oct

உலகை நாசம் செய்துவந்த மகிஷன் என்ற அசுரனை அழிக்க துர்கா தேவி 9 நாட்கள் போராடினாள்; இறுதியில் விஜயதசமி நன்னாளில் மகிஷனை சம்ஹரித்தாள் துர்க்கை. அப்போது தேவியின் படைக்கலங்களை பூஜித்து ஆயுத பூஜை கொண்டாடினர் தேவர்கள் என்கிறது தேவி பாகவதம்.

தனது  பிரிய மனைவி சீதையைக் கடத்திச் சென்ற இலங்கை வேந்தன் ராவணனை போரில் அயோத்தி ராமன் வென்ற நாளும் விஜயதசமியே என்று ராமாயணம் கூறுகிறது. 

12 ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து பஞ்ச பாண்டவர்கள் தங்கள் நாடு திரும்பிய நாள் விஜயதசமி. முன்னதாக, வன்னிமரத்தில் மறைத்து வைத்திருந்த தனது ஆயுதங்களை புரட்டாசி நவமி நாளில் மீட்டு வந்தான் அர்ஜூனன். கௌரவ சகோதரர்களால் வஞ்சிக்கப்பட்ட பாண்டவர்கள் தங்கள் ஆற்றலை மீண்டும் பெற்ற நாள் இது என்கிறது மகாபாரதம்.

Continue reading