Tag Archives: ஹாரி ஷெரிடன்

கலாம், காலம் தந்த கொடை!

15 Oct

-ஷாரி ஷெரிடன்

                நாடு முழுவதிலுமிருந்து புனிதப்பயணிகளை ஈர்க்கும் ராமேஸ்வரம் தீவில் 92 ஆண்டுகளுக்கு முன்னர், ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் என்ற அந்த மாமனிதர் பிறந்தார். அவர் ஏன் இன்னும் அனைவராலும் நினைவு கூரப்படுகிறார்? குடியரசுத் தலைவர் மாளிகையை அவர் எவ்வாறு அனைவருக்குமானதாக மாற்றி அமைத்தார்?  இந்தியாவின் குடியரசுத் தலைவர்களிலேயே மிகச் சிறந்தவராக அவர் ஏன் போற்றப்படுகிறார்?

                தனது வாழ்க்கையில் விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் போன்ற மாபெரும் திருப்பங்கள் அனைத்தையும் எதிர்பாராமல் அடைந்ததாக, அவரே குறிப்பிட்டிருக்கிறார். அவரது வாழ்வின் மூன்றாம் பகுதி, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் வற்புறுத்தல் காரணமாக மாற்றம் பெற்றது. நாட்டு நலனுக்காக வாஜ்பாய் கூறியபடி புதிய பொறுப்பை ஏற்றார் கலாம்.

                அன்றுமுதல் அவர் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த குழந்தைகளின் நலனுக்காகவே குடியரசுத் தலைவர் பதவியைப் பயன்படுத்தினார். அதன்மூலமாக, ராமேஸ்வரம், மசூதி தெருவில் மழலைப்பருவத்தில் கலாம் கழித்த நாட்கள் நாடு முழுவதிலும் பேசுபொருளாயின. ராமேஸ்வரம்,  மிகச் சிறந்த ஆத்மா ஒருவரின் இளமைப்பருவத்தைச் செதுக்கியதில் பெரும்பங்கு வகித்திருக்கிறது.

Continue reading

மறக்க முடியா மக்கள் தலைவர்!

27 Jul

-ஹாரி ஷெரிடன்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்  மறைந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்டன. இன்றும் நாம் அவரைக் கொண்டாடுகிறோம்; அவரது பொன்மொழிகளைநாம் நினைவுகூர்கிறோம். இதுவரையிலான குடியரசுத் தலைவர்களில் மிகவும் நேசிக்கப்பட்டவரான டாக்டர் அப்துல் கலாம், இந்திய ஏவுகணைத் திட்டங்களின் கதாநாயகரும்கூட.

அவர் பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் அசாதாரணமான புகழ்வட்டம் அவரைச் சூழ்ந்திருந்தது. பலதரப்பட்ட பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மத்தியில் அவர் மிகவும் எளிமையைக் கடைபிடித்தார். அவரது பெருந்தன்மை, வெளிப்படையான குணம், மிகுந்த நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை விளக்கவே முடியாது. அவர், மனிதநேயம், அறிவாற்றல், நன்னடத்தை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பு மக்களையும் வசீகரிப்பவராக மிளிர்ந்தார்.

Continue reading