வீர் பால் திவஸ் / வீரச் சிறுவர்கள் நாள்

26 Dec

இன்றைய நாளை (டிச. 26) வீரச் சிறுவர்கள் நாளாகக் கொண்டாடி இருக்கிறது இந்திய அரசு. 

அது என்ன வீரச் சிறுவர்கள் நாள்? 

சீக்கிய குரு கோவிந்த சிங்கின் இரு மகன்களான ஜொராவர் சிங், ஃபதே சிங் இருவரும் உயிருடன் கல்லறையில்  புதைக்கப்பட்ட தினம் இன்று!

ஏற்ற தருமம் காக்க சிறு வயதில் உயிரை ஈந்த இளம் தளிர்கள் இவர்கள்.

இவர்களைப் பற்றி  பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்காது. இவர்களைப் பற்றி நமது வரலாற்று பாடப்புத்தகத்தில் பாடங்கள் ஏதும் இல்லை. இதையெல்லாம் பாடத்தில் வைத்து, மாணவர்கள் படித்துவிட்டால் தேசபக்தி பெருகிவிடுமே?

இவர்கள் இருவரும் சீக்கிய குரு கோவிந்த சிம்மனின் மகன்கள். ஜொராவர் சிங்கின் வயது 14. ஃபதே சிங்கின் வயது 6. 

மொகலாயர் ஆட்சியின் போது, வாள்முனையில் இந்து மக்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்ட போது, அதை எதிர்த்து இந்துக்களின் தன்மானம் காக்க வாளேந்தியது சீக்கிய சமூகம். சீக்கியர்களின் (பத்தாவது) கடைசி குரு கோவிந்த் சிங். இவரைப் பற்றி மகாகவி பாரதி கவிதை எழுதி இருக்கிறார். அற்புதமான தியாக சரிதம் இவருடையது. 

குரு கோவிந்தரின் மகன்களை மதம் மாற்றிவிட்டால் ஒட்டுமொத்த மக்களும் தாமாக மாறுவார்கள் என இஸ்லாமிய மதகுருக்கள் திட்டமிட்டனர். ஒரு போரில் குரு கோவிந்தரின் புதல்வர்கள் பிடிபட்டனர். 

அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன. சிறுவர்கள் மசியவில்லை. 

இருவரும் சித்ரவதை செய்யப்பட்டனர். ஆனால் கலங்கவில்லை. 

அவர்களைச் சுற்றிலும் சுவர் எழுப்பப் போவதாக மிரட்டினர். சிறுவர்கள் அஞ்சவில்லை. 

எனவே வாசிர்கான் என்ற ஆட்சிப் பிரதிநிதி 26.12.1705 அன்று, பஞ்சாப் மாகாணம், சர்ஹிண்ட் அருகே இருவரையும் உயிருடன் கல்லறை வைத்துக் கட்டினான். 

இறுதிவரை ‘மதம் மாறினால் உயிர் பிழைக்கலாம்’ என்று வாய்ப்பளித்தும் கூட, மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர் இந்த மாவீரர்கள். 

இருவருக்கும் கல்லறை கட்டிக் கொண்டிருந்தபோது தம்பியின் கழுத்துக்கு செங்கல் உயர்ந்து விட்டது. இப்போது அண்ணன் ஜொராவர் கண்கலங்கினான். ”அண்ணா உனக்கு உயிர்மேல் ஆசை வந்துவிட்டதா?” என்று தம்பி ஃபதே சிங் கேட்கிறான். 

ஜொராவர் சிங் கூறுகிறான்: ”என்னை விடச் சிறியவனான நீ எனக்கு முன் உயிர்துறக்கிறாயே என்றுதான் கண்கலங்கினேன்”.

உலக வரலாற்றிலேயே மிக இளம் வயது தியாகிகள் இவர்கள்தான். ஐந்து ஆண்டுகள் கழித்து பண்டா சிங் பகதூர் சீக்கிய வீரர் படையுடன் போரில் வாசிர்கானைக் கொன்று பழி தீர்த்தார்.  

சீக்கியர்கள் இவர்கள் நினைவாக சர்ஹிண்ட் அருகே ஃபதேகரில் குருத்வாரா கட்டியுள்ளனர். 

இந்த இரு இளம் சிங்கங்களின் பலிதான நாளை இந்திய அரசு தற்போது கௌரவித்திருக்கிறது. வரும் நாட்களில் இந்த இளம் வீர புருஷர்களின் வரலாறு பாடநூல்களில் இடம் பெறும். 

பிரதமர் மோடிக்கு நன்றி. 

அயல் மதத்தவரின் விழா மேடையில் நின்று கொண்டு, சில கழிசடைகளின் கரவொலிக்காக, ”நான் இந்து அல்ல” என்று கூறி தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்ளும் ஈனப்பிறவிகள் அறிய வேண்டிய சரிதம், இவ்விரு வீர பாலகர்களின் தியாக சரிதம். 

அதற்காகத் தான் அனுசரிக்கப்படுகிறது… 

வீர் பால் திவஸ்/ வீரச் சிறுவர்கள் தினம்! 

   ***

வாழி பாலர்கள் ஈகை! 

.

மலை வளையும்; தலை குனியும் 

நதி நிற்கும், தடை கண்டே! 

என் இன் இளமை ஒடுங்காது… 

அபாயத்தில் நடுங்காது! 

.

குரு கோவிந்தன் இரு புதல்வர்

சின்னஞ்சிறுவர்- இளந்தளிர்கள்

எனின் சிங்கத்தின் குட்டியினர்;

தர்மத்தின் தீரக் காவலர்கள்! 

அடல் ஏறாகச் சீறிட்டார்… 

கர்ஜித்தார் கால பைரவன் போல்:

.

”ஒருக்காலும் தலை வணங்கோம்! 

எந்நாளும் கொள்கை விடமாட்டோம்! 

எம் தேசம் எங்கள் உயிராகும்! 

எம் தர்மம் எங்கள் உயிராகும்! 

குரு தசமேசர் உயிர் ஆவர்! 

ஸ்ரீ குருகிரந்தம் உயிராகும்!”

.

ஜோராவர் வீறுடன் முழங்க

ஃபத்தே சிம்மன் கர்ஜனை செய்தான்:

.

“சுவர் தனையே எடுப்பிடுக! 

கல்லாலே மூடி அடைத்திடுக! 

எம் மூச்செல்லாம் உணர்ச்சி தரும்! 

எங்கள் பிணமும் எழுச்சி தரும்! 

இந்தச் சுவர்கள் முழக்கமிடும்! 

என்றென்றும் வீர கோஷமிடும்! 

எங்கள் தாய் நாடு வென்றிடுக! 

எம் ஆருயிர் தர்மம் வென்றிடுக! 

குரு தசமேசர் வென்றிடுக! 

ஸ்ரீ குருகிரந்தம் வென்றிடுக! 

.

  • நன்றி: சங்கப் பாமாலை
  • அமரர் திரு. ராம.கோபாலன் அவர்களால் எழுதப்பட்ட பாடல்.

.

Leave a comment