Tag Archives: இயற்கை

கிள்ளைமொழி

31 Dec

தேனிசை வழியும் அந்த

ஆண்குரலும் பெண்குரலும்

அனைவராலும் விரும்பப்படுகின்றன…

.

சோகச் சூழலையும்

இனிமையாக்கும்

ஜாலவித்தை அறிந்தவை

அக்குரல்கள்.

Continue reading

ஆம், அதுவே ஆகுக!

15 Oct


விண்ணைச் சாடும் சிகரங்களுடன்
அகன்று விரிந்த மலைத் தொடர்
எப்படி உருவானது?
மலையினில் தோன்றி சமுத்திரம் நோக்கி
வளைந்து நெளிந்த பாதையை
நதி எவ்வாறு தீர்மானித்தது?
பாலைப் பெருவெளியின்
மடிப்புகள் உருவானது யாரால்?
கரை காணாப் பெருங்கடலினிடையே
சிறு தீவுக்கூட்டம் அமைந்தது எங்ஙனம்?

. Continue reading

மொட்டை மாடியில்…

8 Jul

ஆடிப் பௌர்ணமியின் பிரகாசம்
தென்னை ஓலையில் மின்னுகிறது.

தூறலுடன் கூடிய குளிர்க்காற்று
மேனியை வருடிப் போகிறது.

பக்கத்து வீட்டில் மலர்ந்த மல்லிகைக் கொடி
இங்கும் மணம் பரப்புகிறது.

நாவில் இன்னும் தேங்கி இருக்கிறது
சுக்கு மல்லிக் கஷாயம்.

அறை நண்பனின் அலைபேசியில்
ஏசுதாஸ் பாடிக் கொண்டிருக்கிறார்.

என்ன ஒரு தருணம்!
எக்காளமிடுகிறது மனது.

என்ன செய்ய,
இத்தனையையும் பதிவு செய்யும்
கருவி இல்லையே –
இந்தக் கவிதையைத் தவிர.