Tag Archives: இளைஞர்மணி

பள்ளி மாணவர்களை விஞ்ஞானியாக்கும் இஸ்ரோவின் ‘யுவிகா’ திட்டம்

23 Mar

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டுதோறும் 9ஆம் வகுப்புப் படிக்கும் 150 மாணவர்களைத் தேர்வு செய்து ‘இளம் விஞ்ஞானி கார்யக்கிரமம்’ (யுவிகா) என்ற பெயரில் சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.

அதிகமான மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Continue reading

அரசு ஊழியர்களை உருவாக்கும் பிகார் ரயில்நிலையம்!

25 Jan

 

பிகார் மாநிலத்திலுள்ள சாசாராம் ரயில்நிலையத்தின் முதல் இரு நடைமேடைகள் அதிகாலையிலேயே களைகட்டிவிடுகின்றன. அங்கு குழுக்களாக அமர்ந்திருக்கும் இளைஞர்கள் தங்களுக்குள் கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொள்கிறார்கள்; பத்திரிகைகளைப் படிக்கிறார்கள்; போட்டித் தேர்வுப் புத்தகங்களைப் படிக்கிறார்கள். வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள்.

      அதிகாலையிலேயே அவர்களது சுறுசுறுப்பு ரயில்நிலையத்தைச் சூழ்ந்து கொள்கிறது. அந்த ரயில் நிலையத்திலுள்ள ஊழியர்கள், பணியாளர்களுக்கு அவர்கள் செல்லப் பிள்ளைகள்.  ‘ரயில்நிலையத்தின் மாணவர்கள்’ என்று, அவர்களுக்கு ரயில்நிலைய மேலாளர் சார்பில் சிறப்பு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

      சாசாராம், பிகார் மாநிலத்தின், ரோத்தார் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி; மொத்த மக்கள்தொகை 1.5 லட்சம். பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்நகரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மொகலாயப் பேரரசர் ஹுமாயூனை வென்று குறுகிய காலம் ஆட்சி செய்த சூர் வம்ச மன்னர் ஷேர் ஷா சூரியின் (1486 – 1545) தலைநகரமாக இருந்த பெருமைக்குரியது சாசாராம்.  தவிர, பிரபல பட்டியலினத் தலைவர் பாபு ஜெகஜீவன்ராமின் சொந்த ஊரும் கூட.

      செயற்கை ஏரியின் மையத்தில் நிறுவப்பட்ட ஷேர் ஷா சூரியின் நினைவுச்சின்னம் இந்த ஊரில் இருக்கிறது. பெஷாவரில் துவங்கி, கொல்கத்தாவில் முடியும் தெற்கு ஆசியாவின் மிக நீண்ட மைய நெடுஞ்சாலையை (கிராண்ட்  டிரங்க் ரோடு) உருவாக்கியவர் இவரே.

Continue reading

இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்

20 Jul

கேரள  மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில், நாட்டின் முதல் எண்மத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (டிஜிட்டல் யூனிவர்சிட்டி)  துவங்கப்பட்டுள்ளது.

எண்ம அறிவியல், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான கேரள பல்கலைக்கழகம் (Kerala University of Digital Sciences,Innovation and Technology – KUDSIT) என்பதே இந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர். திருவனந்தபுரம்-   டெக்னோசிட்டியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்நிறுவனம் செயல்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு 1,200 மாணவர்கள் பயில முடியும்.

ஏற்கெனவே ‘இந்திய தகவல் தொழிநுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகம் (ஐஐஐடிஎம்—கேரளா)’ என்ற பெயரில் இயங்கிவந்த உயர்கல்வி நிறுவனமே கடந்த பிப்ரவரி மாதம் கேரள அரசால் மேம்படுத்தப்பட்டு, ‘டிஜிட்டல் யூனிவர்சிட்டி’ ஆக மாறியுள்ளது.

Continue reading