Tag Archives: கல்வி

STEM: இந்த நூற்றாண்டுக்கான கல்வி!

18 Jun

மனித சமுதாயத்தின்  வளர்ச்சிப்பாதையில் இடைவிடாத முயற்சியும் தேடலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த மகத்தான கண்டுபிடிப்புகள், சிக்கிமுக்கிக் கல்லும்,  கூர்மையான கல்லும் தான். அங்கிருந்து தான் மனித நாகரிகத்தின் பயணம் தொடங்கியது. இன்று வானளாவிய கட்டடங்களும்,  விண்ணை அளக்கும் விண்கலங்களும், விதவிதமான உணவுப் பண்டங்களும், உலகையே அழிக்கவல்ல போர் ஆயுதங்களும் படைத்தவனாக மனிதன் மாறி இருக்கிறான்.   

                இந்த மாற்றம் உடனடியாக ஏற்பட்டுவிடவில்லை. மனிதனின் அடுத்த மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாக எண்களையும், மொழிகளையும் கூறலாம். அடுத்த சில ஆயிரம் ஆண்டுகளில், மனிதனால் வட்டமும், பூஜ்ஜியமும், சக்கரமும் கண்டறியப்பட்டன. இவைதான் இத்தனை காலமாக, முந்தைய உலகிலிருந்து தற்போதைய உலகு வரை நம்மை வழிநடத்தி வந்திருக்கின்றன.

Continue reading

எங்கே செல்கிறோம்?

9 Sep

காரைக்காலில் அண்மையில் நடந்துள்ள நிகழ்வு, கல்நெஞ்சுள்ளவர்களையும் கரைய வைத்து விடும். தனது மகளுடன் படிக்கும் சக மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து அவரது உயிரை மாய்த்திருக்கிறார், ஒரு தாய். நமது கல்வி முறையும் சமூக உறவுகளும் மிக மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை இந்நிகழ்வு கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

Continue reading

கும்பல் வெறியாட்டம்

27 Jul

கடந்த ஜூன் 17 அன்று, கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தனியார் பள்ளிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறை வடிவெடுத்ததும், அதில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதும் கடுமையாகக் கண்டிக்கத் தக்கவை. மக்களின் கும்பல் வெறியாட்டம் நமது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

அரசும் காவல் துறையும் தகுந்த நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால் இந்தப் போராட்டம் நிகழாமலே தடுத்திருக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. போராட்டம் முற்றுவதற்கு முன்னமே அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம். பள்ளியில் பெருந்திரள் கூடுவதை காவல் துறை தடுத்திருக்கலாம். எல்லாம் உண்மைதான். அதற்காக, இந்த வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஏற்க இயலாது.

Continue reading