Tag Archives: தேர்தல்

கவனம் ஈர்க்கும் பேரவைத் தேர்தல் முடிவுகள்

9 Mar

கடந்த வாரம் வெளியான மூன்று மாநில தேர்தல் முடிவுகள்  தமிழகத்தில் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு இங்கு பெரும் கவனத்தை ஈர்த்திருந்ததால், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

     நாட்டின் ஏழ்மையான வடகிழக்கு சகோதரிகள் என்று அழைக்கப்படும் ஏழு மாநிலங்களும் புவியியல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிஸோரம், சிக்கிம், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய இந்த 7 மாநிலங்களுடன் அஸ்ஸாம் மாநிலத்தையும் சேர்த்து 8 மாநிலங்கள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.

Continue reading

தலைநகரில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்!

16 Dec

குஜராத், ஹிமாசல் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் பரபரப்பில், தில்லி மாநகராட்சித் தேர்தலில் நிகழ்ந்திருக்கும் அதிரடி மாற்றம் பலராலும் கவனிக்கப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியை நிர்வகித்து வந்த பாஜகவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

தலைநகர் தில்லியை உள்ளடக்கிய சட்டப்பேரவையில் 2015 முதல் அசுர வலிமையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தாலும் தில்லி மாநகராட்சியை வசமாக்க முடியவில்லை. அதில் பாஜக தொடர்ந்து வென்று வந்தது.

தில்லி மாநகராட்சி இதற்கு முன் வடக்கு தில்லி, தெற்கு தில்லி, கிழக்கு தில்லி என மூன்று மாநகராட்சிகளாக நிர்வகிக்கப்பட்டது. மூன்றிலுமே பாஜக பெரும்பான்மை வலுவுடன் நிர்வகித்து வந்தது. மாநில ஆட்சி தம் வசமிருந்தபோதும் மாநகராட்சிகள் பாஜக வசமிருந்ததால், ஆம் ஆத்மி கட்சியால் அடிமட்ட அளவில் தனது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை.

Continue reading

எங்கெங்கு காணினும் வாரிசு அரசியல்!

10 Nov

                மக்களாட்சி முறையில் தேர்தலே மாற்றத்துக்கான ஆயுதம். வாக்குச்சீட்டு மூலமாக தம்மை ஆள்வோரை மாற்ற மக்களுக்குக் கிடைக்கும் அமைதியான வாய்ப்பு தேர்தலே. குறிப்பாக மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களின் முடிவுகள் தேசிய அளவிலான அரசியல் காற்றின் திசையை ஓரளவு வெளிப்படுத்துகின்றன.

                அண்மையில் ஆறு மாநிலங்களைச் சேர்ந்த ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்கள், சில முக்கியமான உண்மைகளைக் கூறுகின்றன. என்னதான் மக்களாட்சியில் சிறந்து விளங்குவதாக நம்மை நாமே பாராட்டிக் கொண்டாலும் ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரின் குடும்பத்தைச் சார்ந்தவரையே பெரும்பாலான அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலில் களமிறக்கி இருப்பதை வேறு எப்படிச் சொல்வது?

Continue reading