Tag Archives: நிகழ்வு

அக்கினிக் குஞ்சுகள் – நூல் வெளியீடு

24 Mar
பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அருட்செல்வம் நா. மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் (21.03.2023), ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் வெளியிடப்பட்டது. நூலை என்ஜிஎம்  கல்லூரித் தலைவர் திரு. பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, திரு. ம.சீனிவாசன் பெற்றுக் கொண்டார். அருகில் திரு. சங்கர் வாணவராயர் உள்ளார்.

செய்திச் சுருக்கம்:

மறைந்த தொழிலதிபரும் கல்வியாளருமான அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா கடந்த 21.03.2023, செவ்வாய்க்கிழமை, பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. என்.ஜி.எம். கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். சக்தி குழுமத்தின் தலைவர் ம.மாணிக்கம் வரவேற்றார். என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர்கள் ம. பாலசுப்பிரமணியம், ம.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில், அருட்செல்வர் நா.மகாலிங்கம் எழுதிய ‘வாழ்வுக்கு வந்த வள்ளலார்’, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் மொழிபெயர்த்த கலீல் ஜிப்ரானின் ‘மனித குமாரன் இயேசு’, வ.மு.முரளியின் ‘அக்கினிக் குஞ்சுகள்- 3 தொகுதிகள்’ ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. இவை அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் வெளியீடுகளாகும்.

‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் தொகுப்பை என்.ஜி.எம். கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, நா.மகாலிங்கத்தின் இளையமகன் ம.ஸ்ரீனிவாசன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சொற்பொழிவாளர் சுகி.சிவம் சிறப்புரையாற்றினார். அந்தச் செய்தியும் படங்களும் இங்கே உள்ளன.

Continue reading

’ஞான சங்கம்’- இனிய அனுபவம்…

21 Nov

அகில பாரத சிந்தனையாளர் அமைப்பான பிரக்ஞா பிரவாஹின் தமிழகக் கிளையான தேசிய சிந்தனைக் கழகம் அமைப்பு, சென்னை- தாம்பரத்தில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடத்திய ’ஞான சங்கம்’- இரு நாள் கருத்தரங்கில் (18,19- நவ. 2017) ஏற்பாட்டாளராகப் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றேன்.

“தேச வளர்ச்சியில் அறிவுலகினரின் பங்களிப்பு” (Role of Intellectuals in Nation Building) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட, தென்பாரத அளவிலான இக்கருத்தரங்கில், தமிழகம், பாண்டிசேரி, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய ஆறு மாநிலங்களில் இருந்து 214 கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ம.வே.பசுபதி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென்பாரதத் தலைவர் பேராசிரியர் இரா.வன்னியராஜன், அகில பாரத இணை பொதுச் செயலாளர் முனைவர் கிருஷ்ணகோபால், பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் அகில பாரத அமைப்பாளர் ஜே.நந்தகுமார், சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஏ.கலாநிதி, பாரதீய சிக்‌ஷண் மண்டலியின் அகில பாரத அமைப்பாளர் முகுல் கனித்கர், பாரதீய மொழிகள் குறித்த ஆராய்ச்சியாளர் சங்கராந்த சாணு, கேரளத்திலுள்ள பாரதீய விசார் கேந்திரத்தின் துணைத் தலைவர் சி.ஐ.ஐசக், சரஸ்வதி நதி நாகரிக ஆராய்ச்சியாளர் முனைவர் எஸ்.கல்யாணராமன், சின்மயா மிஷன் துறவி சுவாமி மித்ரானந்தர், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, கருத்தரங்கின் அமைப்பாளர் பேராசிரியர் ப.கனகசபாபதி, கல்வியாளர் தங்கம் மேகநாதன் உள்ளி்ட்டோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு வழிகாட்டினர்.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை தனலட்சுமி பொறியியல் கல்லூரியின் தலைவர் முனைவர் வி.பி. ராமமூர்த்தி அவர்களின் தலைமையில் கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் இக்கருத்தரங்கைத் திறம்பட நடத்தினர்.

கல்வியாளர்களும், அறிவுலகினரும் நாட்டின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கருத்தரங்கில் இடம்பெற்ற சொற்பொழிவுகளும் விவாதங்களும், அவர்களின் கடமைகளை நினைவுறுத்துவதாக அமைந்திருந்தன.

நதியோரம் நடந்து செல்பவனுக்கும்கூட இதமான குளிர்ச்சியும் இனிய காட்சியும் அனுபவமாகக் கிடைப்பதுபோல, இக்கருத்தரங்கில் நேரடியான பங்கேற்பாளராக இல்லாத போதும், அதன் பயன்கள் எனக்கும் கிட்டின. அற்புதமான இரு நாட்கள் எனது நாட்குறிப்பேட்டில் பதிவாகின.

அந்த நிகழ்வின் சில புகைப்படப் பதிவுகள் இங்கே.

’ஞான சங்கம்’ கல்வியாளர் கருத்தரங்கில் தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ம.வே.பசுபதி.

’ஞான சங்கம்’ கல்வியாளர் கருத்தரங்கில் பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் அகில பாரத அமைப்பாளர் ஜே.நந்தகுமார்.

’ஞான சங்கம்’ கல்வியாளர் கருத்தரங்கில் பாரதீய மொழிகள் ஆராய்ச்சியாளர் சங்கராந்த் சாணு.

’ஞான சங்கம்’ கல்வியாளர் கருத்தரங்கில் சென்னை அண்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேரா. ஏ.கலாநிதி.

’ஞான சங்கம்’ கல்வியாளர் கருத்தரங்கில் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி.

’ஞான சங்கம்’ கல்வியாளர் கருத்தரங்கில் பாரதீய சிக்‌ஷண் மண்டலியின் அகில பாரத அமைப்பாளர் முகுல் கனித்கர்.

’ஞான சங்கம்’ கல்வியாளர் கருத்தரங்கில் பேராசிரியர் ப.கனகசபாபதி.

 

முகநூல் பதிவு