Tag Archives: பொது

தாமரையும் நாணயமும்…

9 May

1968-1971 காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 20 பைசா நாணயம் இது. 

ஒருபுறத்தில் அசோகச் சின்னம், பாரத் என்று ஹிந்தியிலும் இந்தியா என்று ஆங்கிலத்திலும் இடம் பெற்றுள்ளன. மறுபுறத்தில் தாமரைப்பூவுடன் 20 பைசா மதிப்பும் அச்சிட்ட ஆண்டும், ஆலையின் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.  

Continue reading

தர்மபுரி மாவட்டத்தின் உடனடித் தேவைகள்

6 Aug

தன்னார்வ அமைப்பு ஒன்று, மத்திய அரசிடம் சமர்ப்பிக்க, பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியின் நிலை குறித்து ஓர் ஆய்வு செய்தது. அப்போது, அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, தர்மபுரியில் பணியாற்றும் பத்திரிகையாளர் என்ற முறையில், 2022 பிப்ரவரியில் நான் அளித்த தனிப்பட்ட அறிக்கை இது…

தர்மபுரி மாவட்டம், தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்று. நீர்வளம், விவசாயம், தொழில்வளம் ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதால், இந்த மாவட்ட மக்கள் பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்வது வழக்கமாக உள்ளது.

இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கீழ்க்கண்ட அம்சங்கள் உடனடித் தேவை:

  1. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதி
  2. விவசாயத்துக்குத் தேவையான நீர்வளம்
  3. வேலைவாய்ப்பை அதிகரிக்கும் தொழில்கள்.
  4. வனவளம், சுற்றுலாவை மேம்படுத்துதல்

Continue reading

அசரீரியாக ஒரு வாழ்த்து

10 Jul

புராணக் கதைகளில் வரும் ‘அசரீரி’க் குரல் குறித்து நாம் அனைவருமே கேட்டிருப்போம். புராண மாந்தர்களை வழிநடத்தும் கண்ணுக்குத் தெரியாத அந்தக் குரலுக்கும், அந்த மாந்தர்களின் வாழ்வுக்கும் பெரும் சம்பந்தமுண்டு என்பதையும் கதைகளின் முடிவில் கண்டிருக்கிறோம்.

அந்த வகையில், ஒரு அசரீரிக் குரலாக எனக்குக் கிடைத்த வாழ்த்தை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன். ஏனெனில், இந்த வாழ்த்தில் அடங்கியுள்ள வழிகாட்டுதல் அனைவருக்கும் பொதுவானது. Continue reading