Tag Archives: அறிவிப்பு

சென்னை புத்தகக் காட்சியில்…. அக்கினிக் குஞ்சுகள்

7 Jan

.

சென்னை புத்தகக் காட்சியில், பொள்ளாச்சி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள எனது ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் விற்பனையில் உள்ளது.

10 பிரிவுகளில் 120 இந்திய விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு…

சுமார் 700 பக்கங்கள்; மூன்று தொகுதிகள்.

ஒரு தொகுதியின் விலை: ரூ. 250; மூன்று தொகுதிகளும் சேர்த்து விலை: ரூ. 750.

சென்னை புத்தகக் காட்சியில், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் அரங்கு அமைத்துள்ளது. அக்கினிக் குஞ்சுகள் உள்பட மையத்தின் அனைத்து நூல்களும் இங்கு கிடைக்கும்.

(அரங்கு எண்: 392).

***

மேலும் விவரங்களுக்கு…

திரு. பாலசுப்பிரமணியம் (கைப்பேசி எண்: 9976144451)

திரு. கிரி (கைப்பேசி எண்: 9445637190)

.

அக்கினிக் குஞ்சுகள்- நூல் விளம்பரம்

9 Nov

பொள்ளாச்சி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ள எனது ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூலுக்கு சமூக ஊடகங்களில் அவர்கள் செய்துள்ள விளம்பரம் இது.

இதனை வடிவமைத்த நண்பர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி.

ஒரு தொகுதியின் விலை: ரூ. 250; மூன்று தொகுதிகளும் சேர்த்து விலை: ரூ. 750. தேவைப்படுவோர், கீழ்க்கண்ட பதிப்பகத்தின் அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விபிபி-யில் பெறலாம்.

Continue reading

அக்கினிக் குஞ்சுகள்- நூல் அறிமுகம்

21 Aug

தினமணி- இளைஞர்மணியில் தொடராக நான் எழுதிய இந்திய விஞ்ஞானிகள் குறித்த 120 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, பொள்ளாச்சி அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தால், 670 பக்கங்களுடன், மூன்று தொகுதிகளாக, ரு. 750 விலையில் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. அந்நூலில் வெளியாகியுள்ள எனது முன்னுரை இது...

அக்கினிக் குஞ்சுகள்’ நூலின் முன்னுரை

ஆக்கமும் நோக்கமும்…      

தினமணி நாளிதழின் இணைப்பிதழாக செவ்வாய்தோறும் வெளிவரும்  ‘இளைஞர்மணி’யில் வெளியான இந்திய விஞ்ஞானிகள் குறித்த கட்டுரைத் தொடரின் தொகுப்பே இந்த நூல்.

2015 அக்டோபர் 27ஆம் இதழில் துவக்கிய இந்தத் தொடர் 2018 டிசம்பர் 20இல் நிறைவடைந்தபோது, 120 கட்டுரைகள் வெளியாகி இருந்தன. ஆனால், இந்தக் கட்டுரைகளை எழுதத் துவங்கியபோது இவ்வளவு கட்டுரைகளை எழுதுவேன் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் இதனை ஒரு தொடராகவே நான் கற்பனை செய்யவில்லை.

இளைஞர்மணியில் பத்து முக்கியமான இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி எளிய முறையில் அறிமுகம் செய்யலாம் என்பதே முதலில் திட்டமாக இருந்தது. ஆனால், அதற்காக இணையத்திலும் நூலகத்திலும் அடிப்படைத் தரவுகளைத் தேடியபோது, கட்டுரைகளின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்தது. அதனால்தான் இந்தக் கட்டுரைத் தொடருக்கு தனிப்பட்ட தலைப்பு கொடுக்கப்படவில்லை.

எனது இந்த எழுத்துப்பணி உற்சாகமாகத் தொடர மூவர் முக்கியமான காரணம். தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன், தினமணி இணைப்பு இதழ்களின் பொறுப்பாசிரியர் திரு.பாவை.சந்திரன், இளைஞர்மணி தயாரிப்பைக் கவனித்துவந்த முதன்மை உதவி ஆசிரியர் திரு. என்.ஜீவா ஆகியோரே அந்த மூவர். இவர்களது ஆதரவும் ஆலோசனைகளூம் தான் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டின.

Continue reading