Tag Archives: வெண்முரசு

நவீன வியாசருக்கு நன்றி!

20 Jul

தமிழின் தற்கால எழுத்தாளர்களில் முதலிடம் வகிப்பவர் திரு. ஜெயமோகன். சிறுகதை, புதினம், வாழ்க்கை வரலாறு, சிறுவர் இலக்கியம், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், திரைக்கதை வசனம் எனப் பல துறைகளிலும் எழுதிக் குவித்திருப்பவர். இவர் இதுவரை எழுதியுள்ள 100-க்கு மேற்பட்ட நூல்களைப் படிக்கவே நமக்கு நேரம் போதாது. அன்னை கலைவாணியின் அருள் முழுவதும் பெற்ற பெருந்தகை.

2010 முதலாகவே இவரது இணையதளத்தின் தினசரி வாசகன் நான். இவரது படைப்பாற்றலில் வியந்தது போலவே, இவரது அரசியல் பார்வையின் போதாமையை எண்ணி வருந்தவும் செய்திருக்கிறேன்.  இவரது அரசியல் நிலைப்பாடுகள் வலிந்து திணிக்கும் தற்காப்புக் கொள்கையில் எனக்கு கிஞ்சித்தும் உடன்பாடில்லை. இரு தருணங்களில் அதுபற்றி ஜெ.மோ.விடமே நான் விவாதித்தும் இருக்கிறேன். ஆயினும் இவரது தளத்தின் தொடர் வாசகன் நான். ஜெ.மோ.உடன் நேரடித் தொடர்பும் உண்டு. எனது நெருங்கிய நண்பர்கள் பலர் இவரது நெருங்கிய வட்டத்தில் இருந்திருக்கிறார்கள்; இப்போதும் சிலர் இருக்கிறார்கள். ஆயினும் அந்த நெருங்கிய நண்பர் குழாமில் நான் சேரவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. எனது பாதை தனிப்பாதை. அதேசமயம், ஜெயமோகன் என்னும் எழுத்துலக மன்னரின் இலக்கிய ராஜபாட்டையில், ஓரமாக நின்று பூத் தூவும் எளிய மனிதன் நான். Continue reading

ஜெயமோகனின் வெண்முரசு!

8 Jan

தமிழின் முன்னணி எழுத்தாளர் திரு. ஜெயமோகன், தனது இணையதளத்தில் ஜனவரி 1 முதல் மகாபாரதத்தை புதுவடிவில் ‘வெண்முரசு’ என்ற தொடராக எழுதி வருகிறார். தொடர்ந்து பத்தாண்டுகள் இதனை எழுதி, மாபெரும் தொகுப்பாக வெளியிடவும் திரு.ஜெயமோகன் திட்டமிட்டுள்ளார்.

மகாபாரதம் இயல்பிலேயே மாபெரும் இலக்கியம். பாரதத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் பேரிடம் வகிக்கும் மகாபாரதம் நம் ஒவ்வொருவரின் நாடியிலும் கலந்துள்ளது. இதனை பின்நவீனத்துவத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில்; நவீன வடிவில்  மீளுருவாக்க திரு.ஜெயமோகன் எடுத்துள்ள முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியது. இறைவன் அவருக்கு அதற்கான முழு ஆற்றலையும் அளிக்க பிரார்த்திக்கிறேன்.

இந்தத் தொடரை கீழ்க்கண்ட இணையதளங்களில் தினசரி படிக்கலாம். தனது தொடர் குறித்த விவாதங்களையும் திரு. ஜெயமோகன் வரவேற்றுள்ளார்.

காண்க: வியாசனின் பாதங்களில்… 

வெண்முரசு தொடரைப் படிக்க, கீழ்க்கண்ட தளங்களை அணுகவும்:
.
 
.